தடுப்பு கட்டையில் இருசக்கரவாகனம் மோதி வாலிபர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே தடுப்பு கட்டையில் இருசக்கரவாகனம் மோதி வாலிபர் பலி
உளுந்தூர்பேட்டை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, என்.ஜி.ஓ.காலனி பகுதியை சேர்ந்தவர் கல்யாணகுமார் மகன் சேதுராமன்(வயது 20). இவர் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி கிராமம் அருகில் வந்தபோது நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சேதுராமனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.