சாலையோர வியாபாரிகளுக்கு நடமாடும் வாகனம்

சாலையோர வியாபாரிகளுக்கு நடமாடும் வாகனம் வழங்கப்பட்டது.

Update: 2023-10-03 18:28 GMT

துறையூர் நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா நடமாடும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மெடிக்கல் முரளி, ஆணையர் (பொறுப்பு) ராமர், நகரமைப்பு அலுவலர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் பழங்கள் மற்றும் காய்கள் விற்கும் வியாபாரிகள் 5 பேருக்கும், உணவு மற்றும் ஐஸ்கிரீம் விற்கும் வியாபாரிகள் 3 பேருக்கும், 11 நடமாடும் வாகனங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள், நகர துணை செயலாளர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்