மூங்கில் கம்புகளை கடத்திச்சென்ற மினி வேன் பறிமுதல்

ஒடுகத்தூர் அருகே மூங்கில் கம்புகளை கடத்திச்சென்ற மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-18 17:01 GMT

அணைக்கட்டு

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வனத்துறை அதிகாரிகள் அரசம்பேட்டை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் மினி வேன் ஒன்று வந்தது. அதை வனத்துறையினர் மடக்கி சோதனை செய்தபோது மூங்கில் கம்புகள் இருந்தன.

அந்த மூங்கில் கம்புகள் அரசமரபேட்டை வனப்பகுதியில் வெட்டப்பட்டு கடத்தியதுதெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து மூங்கில் கம்புகளை கடத்தியதாக அதே பகுதியைச்சேர்ந்த 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் மூங்கில் கம்புகளுடன் மினிவேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்