சமையல் எண்ணெய் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்தது
திண்டிவனத்தில் சமையல் எண்ணெய் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்தது.
திண்டிவனம்:
வண்டலூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு மினி லாரி திண்டிவனம் நோக்கி வந்தது. அப்போது திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு சரியாக மூடாத பள்ளத்தில் மினி லாரி சிக்கி, கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினி லாரியை ஒட்டி வந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கவிழ்ந்த மினி லாரியில் இருந்து சமையல் எண்ணெய் பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர், பொக்லைன் எந்திரம் மூலம் மினி லாரி மீட்கப்பட்டது.