தூக்குப்போட்டு மில் காவலாளி தற்கொலை

தேனியில் மில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-11-05 18:45 GMT

தேவாரம் மூனாண்டிபட்டியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 48). தேனி சிவாஜி நகரில் உள்ள ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவர் மில்லில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய தந்தை மொக்கையன் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்