ராமநாதபுரத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோவில் திருவிழா - கிடா வெட்டி பிரம்மாண்ட கறி விருந்து
கிராமத்தில் உள்ள ஆண்கள் ஒன்றுகூடி கிடா வெட்டி, கைகுத்தல் அரிசியில் பிடாரி அம்மனுக்கு படையில் இட்டு வழிபாடு நடத்தினர்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவில், கிராமத்தில் உள்ள ஆண்கள் ஒன்றுகூடி கிடா வெட்டி, கைகுத்தல் அரிசி சாதம் செய்து பிடாரி அம்மனுக்கு படையில் இட்டு வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட கறி விருந்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்றனர்.