'நம்ம ஊரு சூப்பரு' இயக்கம் நடத்துவது குறித்த கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்கம் நடத்துவது குறித்த கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

Update: 2023-05-02 19:04 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் மற்றும் சுத்தத்தை கடைபிடிக்கும் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு இயக்கம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கிராமப்புறங்களை தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட கிராமங்களாக மாற்றவும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், நம்ம ஊரு சூப்பரு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளிலும் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தை சிறப்பாக கடைபிடிக்க ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி பேரூராட்சி போன்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து கிராமப் பகுதிகளில் தூய்மையை பேணி காத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவரும் கட்டாயம் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தை செயல்படுத்தி ஒவ்வொரு கிராமமும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருக்க பணிகளை செய்ய வேண்டும். அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தங்கள் ஒன்றியத்திற்குட்பட்டுள்ள கிராம ஊராட்சிகளில் இதற்கான குழுக்களை ஏற்படுத்தி இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தி கிராமம் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்