அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுக மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..!

அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திமுக மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-02 06:22 GMT

திருச்சி,

திமுக மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்