காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
பாபநாசம்:
பாபநாசம் சட்டமன்ற தொகுதியான இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை தியாகசமுத்திரம் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். பாபநாசம் வட்டார தலைவர்கள் நாகேந்திரன், கண்ணன்,மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் மாவட்டத் துணைத் தலைவர் ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அய்யம்பேட்டை நகர தலைவர் பஷீர், நகர செயலாளர் அக்பர், நகர அவைத் தலைவர் ஜெயகண்ணன், நகரத் துணைத் தலைவர் ஈஸ்வர் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.