காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

நெல்லையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

Update: 2022-11-13 19:55 GMT

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், காங்கிரஸில் இருப்பது பெருமை. காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது நமது கடமை என்ற உணர்வோடு செயல்பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதிக்கு 120 கொடி கம்பங்கள் அமைக்க வேண்டும். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனின் 50 ஆண்டு கால காங்கிரஸ் சேவையை பாராட்டி பொன்விழா ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொன் விழாவின் முக்கிய அம்சமாக பணகுடியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர், ராஜீவ்காந்தி, மூப்பனார் ஆகியோர் சிலைகளை திறக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேல்துரை, ரவி அருணன் உள்பட பலர் காலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்