தூத்துக்குடி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்
தூத்துக்குடி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. அதை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அருகே உள்ள உப்பாற்று ஓடை காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த பகுதியில், சுமாா் 50 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் காணப்பட்ட ஆண் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.