கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீசாா் கைது செய்தனா்.;

Update: 2023-09-30 09:05 GMT

கடத்தூர்

கோபி கரட்டூர் சுடுகாடு அருகில் மதுவிலக்கு போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பெட்ரோல் டேங்க் கவரில் ½ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

பின்னர் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கவுந்தப்பாடியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 52) என்பதும், கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிளும், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்