4 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது
திருட்டு வழக்கில் 4 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு திருட்டு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் 4 ஆண்டுகளாக துப்புத்துலங்காத நிலையில் சம்பவ இடத்தில் காணப்பட்ட கைரேகை பதிவுகளைக் கொண்டு நெல்லை மாநகர கைரேகை பிரிவினரால் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று இந்த திருட்டில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்த வேல்முருகன் (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.