90 வயது மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது
90 வயது மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.;
அரக்கோணம்
90 வயது மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டை பகுதியில் தர்மநாத் சர்மா (வயது 47) என்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் தங்கியுள்ளார். மேலும் அவர், அந்த பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இநத் நிலையில் தர்மநாத் சர்மா, அந்த பகுதியில் உள்ள 90 வயது மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜ் சர்மாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.