முன்னாள் ராணுவ வீரரின் மோட்டார் சைக்கிளில் ரூ.2¾ லட்சம் திருடியவர் சிக்கினார்

குடியாத்தம் அருகே முன்னாள் ராணுவ வீரரின் மோட்டார் சைக்கிளில் திருடியவர் சிக்கினார். முன்னாள் ராணுவ வீரரின் மோட்டார் சைக்கிளில் ரூ.2¾ லட்சம் திருடியவர் சிக்கினார்

Update: 2023-08-26 17:35 GMT

குடியாத்தம் அருகே முன்னாள் ராணுவ வீரரின் மோட்டார் சைக்கிளில் ரூ.2¾ லட்சம் திருடியவர் சிக்கினார்

குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி கே.மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 53). முன்னாள் ராணுவ வீரரான இவர் பரதராமியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு சீட்டு ஏலம் எடுத்தார்.

அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.

பரதராமியை அடுத்த வி.எஸ்.புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கினார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளின் வண்டி டேங்க் கவரில் இருந்து ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை யாரோ திருடிச்சென்றிருந்தனர்.

இது குறித்து பரதராமி போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார். பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்- இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அப்போது ஒருவர் முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

விசாரணையில் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி வங்கக்கட்டூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (42) என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்து ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரத்தை மீட்டனர் மீத பணத்தை கடந்த சில தினங்களில் செலவு செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்