பைக்கில் சென்று ஆடு திருடியவர் கைது

மணல்மேடு அருகே பைக்கில் சென்று ஆடு திருடியவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவருரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-05-14 18:45 GMT

மணல்மேடு:

மணல்மேடு அருகே பட்டவர்த்தி அண்ணா நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் மகன் சதீஷ் (வயது 39)என்பவர் தன் வீட்டில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். சம்பவ தினத்தன்று மதியம் திருவாளப்புத்தூர் கீழத்தெரு கென்னடி மகன் தன்ராஜ் (29) மற்றும் தலைஞாயிறு கீழ வீதி நடராஜன் மகன் முருகன் ஆகியோர் சதீஷ் வீட்டின் ஆட்டை தங்களது பைக்கில் தூக்கி வைத்துக்கொண்டு வேகமாக செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களை அக்கம் பக்கத்தினர்கள் உதவியுடன் மடக்கி பிடிக்க முயன்றதில் தன்ராஜ் பிடிபட்டார். முருகன் என்பவர் தப்பி ஓடி விட்டார், பிடிபட்ட தன்ராஜை மணல்மேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் தன்ராஜ் மீது ஆடு திருடிய வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர், மேலும் முருகனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்