முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய ஒருவர் கைது

கரூரில் முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2023-01-22 18:30 GMT

கத்திக்குத்து

கரூர் ராயனூர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 20). பெயிண்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்தவர் வசீகரன் (20). இவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்ேபாது வந்த வசீகரன், ஆனந்த் (20), சுப்பிரமணியன் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து முன்விேராதம் காரணமாக ரஞ்சித்தை தாகாத வார்த்தையால் திட்டினர்.

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வசீகரன், ஆனந்த், சுப்பிரமணியன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கத்தியை எடுத்து ரஞ்சித்தை குத்தினர். இதனால் படுகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

ஒருவர் கைது

இதையடுத்து கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சித்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் வழக்குப்பதிந்து, வசீகரனை கைது செய்தனர். மேலும் தப்பியோடி ஆனந்த், சுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்