3 பெண்களை மணந்தவர் விஷம் குடித்து தற்கொலை
3 பெண்களை மணந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3 மனைவிகள்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 60). இவர் திருவிழாக்களின்போது பானிபூரி கடை வைத்து நடத்தி வந்தார். இவர் சகுந்தலா, செல்வி, சித்ரா என 3 பேரை திருமணம் செய்து கொண்டார்.
இதில் சகுந்தலா அவரை விட்டு பிரிந்து சென்றார். செல்விக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சித்ராவுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் சம்பாதிக்கும் பணத்தில் மது குடித்து வந்ததாகவும் இதனால் மனைவிகள், குழந்தைகள் யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் மனமடைந்த ராஜேந்திரன் கடந்த 13-ந் தேதி மதுவில் விஷத்தை கலந்து குடித்தார். இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக ராஜேந்திரனை மீட்டு அரியலூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
இது குறித்து 2-வது மனைவி செல்வி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்குமார் வழக்குப்பதிவு செய்தும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.