திருச்செந்தூர் அருகே 2.5 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீரை வைத்திருந்தவர் கைது

திருச்செந்தூர் அருகே திமிங்கலத்தின் உமிழ் நீரை வைத்திருந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-04-16 10:46 GMT

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரின் கையில் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.

அதில், 2 கிலோ 560 கிராம் எடையிலான திமிங்கலத்தின் உமிழ் நீர் இருந்தது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரது பெயர் குமரன் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

இதையடுத்து, சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ் நீரை பறிமுதல் செய்த போலீசார், அதை வைத்திருந்த குமரனை கைது செய்தனர்.

 

Full View


Tags:    

மேலும் செய்திகள்