நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

தியாகதுருகம் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-09 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று ராயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த பர்ணபாஸ் என்ற மாணிக்கம் (வயது 44) என்பவர் தனது வீட்டின் பின்புறம் நாட்டுத்துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், அரசு அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும், அதன் மூலம் வன விலங்குகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. மேலும் இந்த நாட்டுத்துப்பாக்கியை அவர் ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சுவிக்கின்ராஜ் என்பவரிடமிருந்து வாங்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து சூளாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் மாணிக்கத்தை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். மேலும் சுவிக்கின்ராஜை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்