திண்டிவனம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
திண்டிவனம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டாா்.
திண்டிவனம்,
திண்டிவனம் ரோசனை போலீசாருக்கு கொணக்கம் பட்டு பகுதியில் ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில் கொணக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் ஆனந்த் (வயது 34) என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.
அதில் கஞ்சா வாங்கி பயன்படுத்தி வந்த அவர், அதில் இருந்த விதையை எடுத்து வீட்டில் போட்டு இருந்த போது அதில் 2 செடிகள் வளர்ந்துள்ளது. இதன் பின்னர் அவற்றை அவர் வளர்த்து வந்தது தெரியவந்தது.
மேலும் ஆனந்திடம் 100 கிராம் கஞ்சா பொட்டலம், 10 லிட்டர் சாராயம், கஞ்சா பூவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.