கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-07 18:19 GMT

வேலூர் கோட்டை பின்புறம் உள்ள நவநீதம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 28). இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது வேலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜா என்ற சேம்பர் ராஜா (38) என்பவர், ஜெகநாதனை கத்தியை காட்டி மிரட்டி 2,300 ரூபாயை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்