மதபோதகர் தாக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது
நெல்லையில் மதபோதகர் தாக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்துக்கு சென்ற இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபுள் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதன்பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மதபோதகரை தாக்கியதாக நெல்லை பெருமாள்புரத்தை சேர்ந்த ஜான் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.