கார் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்றவர் சாவு

சத்திரக்குடி அருகே கார் ேமாதி, ேமாட்டார் சைக்கிளில் சென்றவர் இறந்தார்.;

Update: 2022-07-28 16:03 GMT

போகலூர்,

ஆந்திராவை சேர்ந்தவர் பாண்டுரங்காராவ்(வயது 25). இவர் காரில் உறவினர்களுடன் மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு சென்று கொண்டு இருந்தார். காமன்கோட்டை விலக்கு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த அக்கிரமேசியை சேர்ந்த ராமசந்திரன்(58) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் பயணித்த 4 பேரும் காயம் அடைந்தனர். இது குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்