செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவனை அடித்து கொன்ற வழக்கில் ேமலும் ஒருவர் கைது

செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவனை அடித்து கொன்ற வழக்கில் ேமலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-03-12 11:14 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த பிரியா என்பவரது மகன் கோகுல் ஸ்ரீ (வயது 17). இவர் கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி தாம்பரம் ரெயில்வே நிலையத்தில் பேட்டரி திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தாக்கியதில் கோகுல் ஸ்ரீ உயிரிழந்தார். இது தொடர்பாக செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா விசாரணை நடத்தினார். தொடர்ந்து கோகுல் ஸ்ரீயை அடித்து கொலை செய்த சிறுவர் சீர்திருத்த பள்ளியின் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு, போலீசார் மற்றும் முடி திருத்துபவர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து அந்த பள்ளியில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்த நந்தகோபால் (58) என்பவரை செங்கல்பட்டு டவுன் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட போது காவலர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதால் கைது செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்