வாகனம் மோதி பீகாரை சேர்ந்தவர் பலி

ஜோலார்பேட்டை அருகே வாகனம் மோதி பீகாரை சேர்ந்தவர் பலியானார்.

Update: 2023-05-19 18:03 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி ஊராட்சி பக்கிரிதக்கா பகுதியில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் அணிந்திருந்த சட்டை பையில் இருந்த ஆதார் கார்டை வைத்து அவர் பீகார் மாநிலம், நபிகஞ்சி பாருல்சிவிம் பகுதியை சேர்ந்த காமேஸ்வர் மஞ்சி (வயது 54) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்