திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-18 21:00 GMT

திண்டுக்கல் முத்தழகுபட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் விமல் அருள்ராஜ் (வயது 34). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், திண்டுக்கல் உழவர் சந்தை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இறைச்சி கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் விமல் அருள்ராஜ் புகார் அளித்தார்.

அதன்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், குஜிலியம்பாறையை சேர்ந்த உமாமகேஸ்வரன் (38) என்பவர் விமல் அருள்ராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து உமா மகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்