சென்னையில் பரபரப்பான சாலையில் பற்றி எரிந்த சொகுசு கார்...!

கோயம்பேடு-சென்ட்ரல் பிரதான சாலையில் சென்ற கார் தீ பிடித்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2022-10-19 09:05 GMT

கோயம்பேடு:

சென்னை கோயம்பேடு-ல் இருந்து சென்ரல் நோக்கி கதிரவன் என்பவர் உயர்ரக பிஎம்டபிள்யூ காரில் சென்றுள்ளார். அப்போது கோயம்பேடு மேம்பாலத்தில் சாலையின் நடுவே சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் திடீரென தீ பிடித்துள்ளது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கதிரவன் உடனே காரை ஓரமாக நிறுத்தியுள்ளார். வேகமாக பற்றி எரிந்த நெருப்பு கார் முழுவதும் பரவியது. உடனே அங்கிருந்தவர்கள் அண்ணாநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து உடனே வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். மளமளவென பற்றி எரிந்த காரில் இருந்து பாகங்கள் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு-சென்ட்ரல் செல்லக்கூடிய பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்