டிராக்டர் மீது சொகுசு பஸ் மோதி விபத்து
டிராக்டர் மீது சொகுசு பஸ் மோதி விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு அருகே பிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சாலையை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த குளிர்சாதன சொகுசு பஸ் ஒன்று சுத்தம் செய்யும் பணியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் டிராக்டரில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. பஸ்சின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்ததை படத்தில் காணலாம்.