வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - வானிலை மையம் தகவல்

தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-14 03:41 GMT

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்