வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது...!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்க்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் டிசம்பர் 17-ம் தேதி வரை மேற்கு திசை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளதாகவும் அது இலங்கையையொட்டி தமிழக மாவட்டங்களின் கரையை கடக்கும் எனவும் கரையை கடந்த பின்னர் உள்மாவட்டங்கள் வழியாக அரபிக் கடல் செல்லும் என்றும் அப்போது உள் மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என்பது வானிலை தொடர்பான ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.