மேம்பால சுவரில் ஏறிநின்ற லாரி

மேம்பால சுவரில்மோதி அதன்மீது லாரி ஏறி நின்றது.

Update: 2023-02-03 19:52 GMT

சென்னையில் இருந்து திருச்சிக்கு கண்டெய்னரில் புதிய கார்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. பின்னர் கார்களை இறக்கி விட்டு அந்த கண்டெய்னர் லாரி திருச்சியில் இருந்து சென்னை நோக்கி நேற்று மதியம் புறப்பட்டது. லாரியை கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா, கோ பவளாங்குடி தெற்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் அசோக்குமார் (வயது 31) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தீரன் நகரை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பலத்த மழை பெய்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி துறைமங்கலம் பெரிய ஏரி மேம்பாலத்தின் பக்காவாட்டு சுவரில் ஏறி நின்று விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை கிரேன் உதவியுடன் மீட்டு அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்