கனிம வளங்கள் ஏற்றிச்சென்ற லாரி டயர் வெடித்தது
செங்கோட்டை அருகே கனிம வளங்கள் ஏற்றிச்சென்ற லாரி டயர் வெடித்தது.
செங்கோட்டை:
தமிழகத்தில் இருந்து புளியரை வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிக் ெகாண்டு தினமும் லாரிகள் செல்கிறது.
இந்த நிலையில் நேற்று ஒரு லாரியில் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது, அதிக பாரம் தாங்காமல் லாரியின் டயர் திடீரென்று வெடித்தது. லாரியை சாமர்த்தியமாக டிரைவர் நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.