சாலையோர பள்ளத்தில் இறந்து கிடந்த லாரி டிரைவர்
சாலையோர பள்ளத்தில் லாரி டிரைவர் இறந்து கிடந்தார்.;
காரைக்குடி
சோமநாதபுரம் போலீஸ் சரகம் காரைக்குடி- தேவகோட்டை சாலையில் அமராவதி புதூர் குறுக்கு சாலையில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனத்தோடு அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த நபர் நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த குமார் என்ற வெள்ளை கருப்பு (வயது 43) என்றும் இவர் அமராவதி புதூரில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார் என்றும் தெரியவந்தது.இது குறித்து சோமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.