தந்தை இறந்த துக்கத்தில் லாரி டிரைவர் விஷம் குடித்து சாவு

மானூர் அருகே தந்தை இறந்த துக்கத்தில் லாரி டிரைவர் விஷம் குடித்து இறந்தார்.

Update: 2022-08-22 19:03 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள மொட்டையனூரைச் சேர்ந்தவர் ஆபிரகாம் மகன் அகஸ்டின் (வயது 27). சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு மொட்டையனூரில் இருந்த இவரது தந்தை ஆபிரகாம் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். இதனால் துக்கம் தாங்காமல் அகஸ்டின், கடந்த 16-ந் தேதியன்று வீட்டில் விவசாயத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகஸ்டின் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்