லாரி மோதி, பாதயாத்திரை பக்தர் பலி

காரியாபட்டி அருகே பாதயாத்திரை பக்தர், லாரி மோதி பலியானார்.;

Update: 2022-12-05 18:52 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி அருகே பாதயாத்திரை பக்தர், லாரி மோதி பலியானார்.

பக்தர் பலி

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்திலிருந்து கருப்பசாமி மகன் கேசவமூர்த்தி (வயது17), ரத்தினம் மகன் குமரன் (22), இருளன் மகன் வெற்றிவேல்முருகன் (18), சின்னமருது மகன் குருமூர்த்தி (22), முருகேசன் மகன் வேலாண்டி (17) ஆகிய 5 பேரும் பாதயாத்திரையாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு, கிரிவலம் செல்வதற்காக சென்றனர்.

இந்தநிலையில் ஆவியூர் தனியார் தொழிற்சாலை அருகே வந்தபோது, தூத்துக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த லாரி மோதியதில் கேசவமூர்த்தி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மற்றொருவர் படுகாயம்

லாரி மோதி தூக்கி வீசப்பட்ட வேலாண்டி படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இறந்த கேசவமூர்த்தியின் உடலை ஆவியூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்