மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்

Update: 2023-06-24 19:42 GMT

தஞ்சை அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

லாரி மோதியது

தஞ்சை சீனிவாசபுரம் அருகே உள்ள ஆனந்தம் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் அபிமன்யூ (வயது 23). நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து திருவையாறு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எட்டாம் நம்பர் கரம்பை அருகே சென்ற போது, அந்த வழியாக எதிரே சாலையில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

வாலிபர் பலி

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அபிமன்யூ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அபிமன்யூ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்