இரும்பு பைப்புகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

வேலூர் அருகே இரும்பு பைப்புகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-11-29 13:17 GMT

பெங்களூருவில் இருந்து இரும்பு பைப்புகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வேலூரை அடுத்த பொய்கை மேம்பாலம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை உடைத்து எதிர்புறம் சென்று சாலையில் லாரி கவிழ்ந்தது. இதில், லாரியின் பின்பகுதியில் இருந்த இரும்பு பைப்புகள் சாலை முழுவதும் சிதறின. இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த வாகனங்கள் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. பின்னர் லாரி மற்றும் இரும்பு பைப்புகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்