400 அடி காற்றாலை விசிறியை ஏற்றி சென்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
400 அடி காற்றாலை விசிறியை ஏற்றி சென்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
பெங்களூருவில் இருந்து மதுரைக்கு சுமார் 400 அடி நீளத்தில் காற்றாலை விசிறி ஒன்றை ஏற்றி கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தது. அந்த லாரி கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே வந்துபோது, சாலை வளைந்து சென்றதால் திரும்ப முடியாமல் நின்றது. இதனால் பின்னர் வந்த மற்ற வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு லாரி மெதுவாக அங்கிருந்து நகர்ந்து சென்றது.