நெல்லையில் கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டிய சிறுத்தை

வனத்துறையினர் வைத்த கூண்டின் அருகில் சென்ற சிறுத்தை, கூண்டுக்குள் செல்லாமல் போக்கு காட்டியவாறு திரும்பி சென்றது.

Update: 2024-06-16 23:18 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மலையடிவாரத்தில் அமைந்துள்ள அனவன்குடியிருப்பு, வேம்பையாபுரம் பகுதிகளில் கடந்த மாதம் புகுந்த 4 சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் அனவன்குடியிருப்பில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அங்கு கூண்டு வைத்து வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். அந்த கூண்டின் ஒரு பகுதியில் ஆட்டை கட்டி வைத்து கண்காணிக்கின்றனர்.

சம்பவத்தன்று இரவில் அந்த கூண்டின் அருகில் சென்ற சிறுத்தை கூண்டுக்குள் செல்லாமல் போக்கு காட்டியவாறு திரும்பி சென்றது. இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த புகைப்படங்களை வனத்துறையினர் வெளியிட்டனர். இது சமூகவலைதளங்கில் வைரலாக பரவியது. 

Tags:    

மேலும் செய்திகள்