தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை

Update: 2023-05-15 19:30 GMT

கூடலூர்

கூடலூர் ராக்லேண்ட் தெரு அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், தேயிலை தோட்டத்துக்குள் சென்று பார்த்தனர். அப்போது உடல் அழுகிய நிலையில் சிறுத்தைப்புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் கூடலூர் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு சுமார் 6 வயதான அந்த ஆண் சிறுத்தைப்புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சிறுத்தைப்புலி இறப்புக்கு காரணம் தெரியவில்லை. ஒரு வாரத்துக்கு முன்பு உயிரிழந்து இருக்கலாம். ஆய்வக அறிக்கை கிடைத்த பின்னரே சிறுத்தைப்புலி இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்