திரளான பேர் பங்கேற்க வேண்டும்

மதுரை மாநாட்டுக்கு செல்லும் தொண்டர் களுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.

Update: 2023-08-18 19:19 GMT

ராஜபாளையம்,

மதுரை மாநாட்டுக்கு செல்லும் தொண்டர் களுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.

ஆலோசனை கூட்டம்

மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் நாளை நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சைக் கேட்க நாம் அனைவரும் செல்ல வேண்டும். இந்த மாநாடு இந்திய அரசியலில் மட்டுமல்ல உலக அளவில் பேச உள்ள மாநாடு ஆகும். இந்த மாநாட்டுக்கு வரும் அனைவரும் பாதுகாப்பாக சென்று வர வேண்டும்.

ஏற்பாடுகள்

தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான ஏற்பாடுகளை நகர், ஒன்றிய நிர்வாகிகள் செய்து கொடுப்பார்கள். இந்த மாநாட்டில் திரளான பேர் கலந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மாநாடு சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மான்ராஜ் எம்.எல்.ஏ., சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ, ராஜவர்மன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இணை செயலாளர் அழகு ராணி, நகர செயலாளர்கள் துரை முருகேசன், பரமசிவம், ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், பேரூர் செயலாளர்கள் பொன்ராஜ் பாண்டியன், அங்கு துரை பாண்டியன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் கந்தலீலா, மகளிர் அணி நகர செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்