தைப்பூசத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அதிக அளவில் குவிந்த பக்தர்கள்...

தைப்பூசமான இன்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கானப்பட்டது.

Update: 2023-02-05 06:59 GMT

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவில் காசிக்கு அடுத்த படியாக மிகப் பெரிய புண்ணிய தலமாகவும், பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. தோஷ பரிகாரங்கள், பித்ரு கடன்கள் செய்ய ஏற்ற தலமாக ராமேஸ்வரம் உள்ளது.

ஆண்டு முழுவதும் பக்தர்கள் அதிக அளவில் வரும் கோவில்களில் ராமேஸ்வரமும் ஒன்று. இந்தியா முழுவதிலும் இருந்து இக்கோவிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தைப்பூசமான இன்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கானப்பட்டது. மேலும், விடுமுறை தினம் என்பதாலும், அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.

அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு பரிகாரங்கள் செய்து அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடியும், புனித தீர்த்த கிணறுகளில் நீராடியும் சாமி தரிசனம் செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்