சங்கராபுரம் அருகேவயலில் வேலை செய்த தொழிலாளி திடீர் சாவு
சங்கராபுரம் அருகே வயலில் வேலை செய்த தொழிலாளி திடீரென உயிரிழந்தாா்.;
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள தும்பை கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் கந்தன் (வயது 45). தொழிலாளி. இவர் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தில் நேற்று காலை விவசாயி ஒருவரது நிலத்தில் கிழங்கு வெட்டுவதற்காக வேலைக்கு சென்றிருந்தார். அங்கு கிழங்கு வெட்டிக் கொண்டிருந்தபோது திடீரென கந்தன் மயங்கி விழுந்தார்.
உடன் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே கந்தன் இறந்துவிட்டதாக கூறினார்.
இது குறித்து சங்கராபுரம் போலீசில் இறந்த கந்தனின் மனைவி மாதவி அளித்த புகாரின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.