சிறுபாலத்தில் படுத்திருந்த தொழிலாளி கீழே விழுந்து சாவு

ஆரணி அருகே சிறுபாலத்தில் படுத்திருந்த தொழிலாளி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-09-21 16:49 GMT

ஆரணி

ஆரணியை அடுத்த புனலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி (வயது 42), கூலி தொழிலாளி. இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு குமரவேல் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு ஆரணி - வந்தவாசி நெடுஞ்சாலையில் புனலப்பாடி கூட்ரோட்டில் உள்ள சிறுபாலத்தின் மேலே மாரி படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது தவறி கீழே கால்வாயில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தின்ா மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புனிதா புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்