மனைவி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
மேச்சேரி:
நங்கவள்ளி அருகே வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32), தையல் தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்றார். பின்னர் அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்றார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஜயகுமாா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற தந்தை வீட்டிற்கு வந்து பார்த்தபோது விஜயகுமார் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார். இது குறித்து நங்கவள்ளி போலீசில் விஜயகுமாரின் தந்தை ஆனைகவுண்டர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.