கிணத்துக்கடவு அருகே சாலையோரம் நின்ற போது கார் மோதி தொழிலாளி பரிதாப சாவு

கிணத்துக்கடவு அருகே சாலையோரம் நின்ற போது கார் மோதி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-01-30 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே சாலையோரம் நின்ற போது கார் மோதி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கார் மோதல்

விருதுநகர் மாவட்டம் வயத்தான் பட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (36). இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையம் பிரிவில் குடியிருந்து கூலிவேலை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முனீஸ்வரனும் அவரது மனைவி முத்துலட்சுமியும் கோவை -பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் மேட்டுப்பாளையம் பிரிவில் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த கார் முனீஸ்வரன் மீது பலமாக மோதியது.

தொழிலாளி சாவு

இந்த விபத்தில் முத்துலட்சுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் விபத்தில் படுகாயம் அடைந்த முனீஸ்வரனை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு முனீஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து முனீஸ்வரன் மீது மோதி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரான கேரள மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்த பிரசன் குமார் (20) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

Tags:    

மேலும் செய்திகள்