எலி மருந்து தின்ற கூலி தொழிலாளி பலி

எலி மருந்து தின்ற கூலி தொழிலாளி பலியானார்;

Update: 2022-11-18 20:07 GMT

சமயபுரம் அருகே உள்ள நரசிங்கமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ராமராஜன் (வயது 28). கூலி தொழிலாளியான. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆகிறது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் ராமராஜனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இந்த நிலையில் மனவிரக்தியில் இருந்த ராமராஜன் வீட்டில் யாரும் இல்லாதபோது, எலிமருந்து தின்று மயங்கி கிடந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்