ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.130-க்கு விற்பனை

ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.130-க்கு விற்பனை

Update: 2023-07-13 23:54 GMT

ஈரோடு மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் சதம் அடித்த தக்காளி விலை பின்னர் மேலும் விலை உயர்ந்து ரூ.130 வரை விற்பனை ஆனது. இதையடுத்து கடந்த சில தினங்களாக ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று முன்தினம் ரூ.10 குறைந்து ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் சற்று ஆறுதல் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று திடீரென தக்காளி கிலோவுக்கு ரூ.40 உயர்ந்து மீண்டும் ரூ.130-க்கு விற்பனை ஆனது.

இதுகுறித்து ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வரும் பி.பி.கே.மணிகண்டன் கூறியதாவது:-

ஈரோடு மார்க்கெட்டுக்கு தற்போது ஆந்திரா, கிருஷ்ணகிரி மற்றும் தாளவாடி ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக 27 கிலோ எடை கொண்ட 1,200-க்கும் மேற்பட்ட தக்காளி பெட்டிகள் வந்தன.

ஆனால் இன்று (அதாவது நேற்று) வெறும் 800 பெட்டி தக்காளி மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதன்காரணமாக ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறையும் பட்சத்தில் தக்காளி மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்