ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம்

தி.மு.க. அரசை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டத்துலும் இன்று உண்ணாவிரதம் நடைபெறும் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

Update: 2022-07-05 07:17 GMT

ராமநாதபுரம்:

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது என்று பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. சில முறைகேடுகள் தொடர்பான பட்டியலையும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

இதையடுத்து தி.மு.க. அரசை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் திமுக அரசை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு பா.ஜ.க.கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் கதிரவன் தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்